தம்ரோ பர்னிச்சர் பிரத்யேக ஷோரூம் திறப்பு விழா
தம்ரோ பர்னிச்சர் பிரத்யேக ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது.
பெரம்பலூரில் புதிய பேருந்துநிலையம் அருகே 3-எம் பிளாசா வளாகத்தில் எஸ்.எஸ்.எலக்ட்ரானிக்ஸ்-பர்னிச்சர்- பாத்திரமாளிகை ஷோரூம் ஆகியவை இயங்கி வருகிறது. 2-வது தளத்தின் ஒருபகுதியில் தெற்கு ஆசியாவில் 250-க்கும் மேற்பட்ட நகரங்களில் இயங்கிவரும் பிரம்மாண்ட பர்னிச்சர் உற்பத்தியாளர்களான தம்ரோ நிறுவனத்தின் பெரம்பலூர் கிளை பிரத்யேக பர்னிச்சர் ஷோரூம் அமைக்கப்பட்டு அதன் திறப்புவிழா நேற்று நடந்தது.
விழாவிற்கு எஸ்.எஸ்.நிறுவனங்கள் மற்றும் என்.டி. குழுமங்களின் நிறுவனர் ஷாகுல்அமீது தலைமை வகித்தார். ஷோரூம் அதிபர் சுல்தான் இப்ராகிம் வரவேற்றார். தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தரும், தனலட்சுமி சீனிவாசன் குழுமத்தின் நிறுவனத்தலைவருமான சீனிவாசரெட்டியார் தம்ரோ பர்னிச்சர் பிரத்யேக டீலர் அவுட்லெட் ஷோரூமை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தம்ரோ நிறுவனத்தின் தமிழ்நாடு மண்டல மேலாளர் அஜித் நிலந்தா, மண்டல விற்பனை மேலாளர் எம்.எம்.கண்ணன் முன்னிலை வகித்தனர்.விழாவில் தனலட்சுமி சீனிவாசன் குழுமத்தின் செயலாளர் நீலராஜ், 3 எம் .பிளாசா உரிமையாளர் அப்துல் ஹமீம், சார்க் புரொமோட்டர்ஸ் தலைமை பொறியாளர் ராஜாராம், வர்த்தக பிரமுகர்கள் வள்ளலார் அரவிந்தன், என்ஜினீயர் சிவராஜ் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தம்ரோ புதிய டீலர்ஷிப் திறப்புவிழாவை ஒட்டி ஷோபா, கட்டில், மெத்தைகள், டைனிங் மேஜைகள், அலுவலக பர்னிச்சர் செட், டி.வி. மற்றும் ஷோகேஸ் செட் ஆகியவை சிறப்பு விற்பனை நடைபெற்று வருவதாக தம்ரோ தமிழ்நாடு மண்டல விற்பனை மேலாளர் தெரிவித்தார்.