தாமிரபரணி அவதார திருவிழா


தாமிரபரணி அவதார திருவிழா
x

பாபநாசத்தில் தாமிரபரணி அவதார திருவிழா நடந்தது.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

பாபநாசத்தில் சித்தர்கள் கோட்டம் சார்பில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு தாமிரபரணி அவதார திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு விக்கிரமசிங்கபுரம் டாணா வள்ளலார் வழிபாட்டு மன்றத்தினரின் அருட்பெருஞ்சோதி அகவல்பாராயணத்தை சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் மழை வேண்டி பஞ்சபூத வழிபாட்டை ராதா தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து நாகப்பன் ஓதுவாரின் திருமுறை விண்ணப்பம் மற்றும் கோ பூஜை நடந்தது. பின்னர் தீப ஆரத்தியை செந்தூர்பாரி முன்னிலையில், காசி மோகனசுந்தரம் சங்கல்பம் செய்து தொடங்கி வைத்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சித்தர்கள் கோட்டம் தாமிரபரணி ஆரத்தி குழுவினர் செய்து இருந்தனர்.


Next Story