சந்திரயான் திட்டங்களில் தமிழர்கள் சாதனை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!


சந்திரயான் திட்டங்களில் தமிழர்கள் சாதனை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
x

விண்வெளித் துறையில் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை பெற்று அசத்தி இருக்கிறது.

சென்னை,

இந்தியாவின் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 - விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் திட்டமிட்டபடி இன்று மாலை 06:04 மணிக்கு துல்லியமாக தரையிறங்கியது. இதன் மூலம் விண்வெளித் துறையில் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை பெற்று அசத்தி இருக்கிறது. இந்த வெற்றியை இந்தியா முழுவதும் உள்ள மக்கள், மாணவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், சந்திரயான் 3 வெற்றியில் தமிழர்களின் பங்கு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருப்பதாவது:-

"சந்திரயான் 3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியிருப்பது தமிழ்நாட்டுக்கு பெருமிதம் தந்துள்ளது. சந்திரயான் 1, 2, 3 கட்ட திட்டங்களுக்கு இயக்குனர்களாக இருந்த மயில்சாமி அண்ணாதுரை, வனிதா, வீரமுத்துவேல் ஆகிய தமிழர்களின் அர்ப்பணிப்பும், நிபுணத்துவமும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஊக்கம் தருவதாக உள்ளது. தமிழ்நாட்டு இளைஞர்கள் இவர்களை பின்பற்றி இந்திய வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story