கத்தார் தமிழர் சங்கத்திற்கு 1-10ம் வகுப்பு வரையிலான தமிழ் பாடப்புத்தகங்கள் - அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்
கத்தார் வாழ் தமிழ் மாணவர்கள் நலன் கருதி ரூ.7 லட்சம் மதிப்பிலான 5,450 தமிழ் பாடப்புத்தகங்கள் கத்தார் தமிழர் சங்கத்திற்கு வழங்கப்பட்டது.
சென்னை,
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கத்தார் வாழ் தமிழ் மாணவர்கள் நலன் கருதி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான 1-10ம் வகுப்பு வரையிலான 5,450 தமிழ் பாடப்புத்தகங்களை கத்தார் தமிழர் சங்கத்திற்கு வழங்கினார்.
இப்புத்தகங்களை கத்தார் தமிழர் சங்க நிர்வாகிகள் முனைவர் லட்சுமி மோகன் (ஒருங்கிணைப்பாளர்), அடிலாஸ் மகேந்திரன், செந்தில் (வளைகுடா தமிழ்ச்சங்கம்) ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் ஆர். கஜலட்சுமி மற்றும் இணை இயக்குனர் சங்கர சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story