தமிழ் சமுதாயம் மதுவுக்கு அடிமையாகிவிட்டது - அன்புமணி ராமதாஸ்
படிப்படியாக மதுக்கடைகளை குறைத்து, மது இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் கீழ்விசிறி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். இந்த கிராமசபை கூட்டத்தில், பிரம்மதேசத்தில் செயல்படும் மதுக்கடையை மூட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது அன்புமணி ராமதாஸ் கூறியதாவது;
தமிழ் சமுதாயம் மதுவுக்கு அடிமையாகிவிட்டது. தமிழ்நாட்டில் பெரியவர்கள், இளைஞர்கள் பலரும் மதுவுக்கு அடிமையாகி சீரழிந்து வருகின்றனர். படிப்படியாக மதுக்கடைகளை குறைத்து, மது இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும். சுதந்திரம் கிடைத்து 78 ஆண்டுகள் ஆனபோதும் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. மக்களுக்கு தரமான கல்வி, குடிநீர், வேலை, வீடு, சுகாதாரம் கிடைப்பதே உண்மையான சுதந்திரம்." என்றார்.
Related Tags :
Next Story