தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்-ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்
தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூர்
ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் அரியலூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் சகாதேவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராமநாதன், மாவட்ட பொருளாளர் புகழேந்தி, மாநில விவசாய அணி செயலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அரியலூர் எம்.எல்.ஏ. சின்னப்பா கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளைெயாட்டி மதுரையில் 15-ந் தேதி நடைபெறும் ம.தி.மு.க. மாநாட்டில் கட்சியினர் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். பொதுமக்கள் விரோத போக்கை கடைபிடித்து வரும் மத்திய அரசை கண்டிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக நகர செயலாளர் மனோகரன் வரவேற்றார். முடிவில் வடக்கு ஒன்றிய செயலாளர் சங்கர் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story