தமிழிழ் பெயர் பலகை பெரிதாக இருக்க வேண்டும்


தமிழிழ் பெயர் பலகை பெரிதாக இருக்க வேண்டும்
x

வணிக நிறுவனம், கடைகளில் தமிழ் பெயர் பலகை பெரிதாக இருக்க வேண்டும் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தி உள்ளார்.

தஞ்சாவூர்


வணிக நிறுவனம், கடைகளில் தமிழ் பெயர் பலகை பெரிதாக இருக்க வேண்டும் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தி உள்ளார்.

தமிழ் வளர்ச்சித்துறை

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் ஒரு வார காலமாக ஆட்சி மொழி சட்ட வார விழா நடந்து வருகிறது. இதையொட்டி வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை வைக்க வலியுறுத்தும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசியதாவது:-

தமிழ் வளர்ச்சித் துறையின் 2022-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27-12-1956-ம் நாளினை நினைவுகூரும் வகையில் 7 நாட்கள் ஆட்சிமொழிச் சட்ட வாரமாக அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் நடைபெற்று வருகிறது.

தமிழில் பெயர் பலகை

அதன் அடிப்படையில் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை வைக்க வலியுறுத்தும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக அரசாணையின்படி வணிக நிறுவனங்களில் கடைகளில் பெயர்ப்பலகைகளில் தமிழில் பெரிய அளவாகவும், அதற்கடுத்து ஆங்கிலத்திலும், 3-வதாக பிற மொழிகளிலும் பெயர்பலகை அமைக்கப்பட வேண்டும். வணிகர்கள் அரசினுடைய இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில்தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சபீர்பானு. தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தனபாலன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரேமலதா. மன்னர் சரபோஜி கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் அமுதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story