தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின ஸ்டார்ட் அப் நிறுவனம் - நெல்லையில் தொடக்கம்
மலைகளில் கிடைக்கும் பொருட்களை மதிப்பு கூட்டு பொருட்களாக்கி விற்பனை செய்யும் வகையில் ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாகியுள்ளது.
நெல்லை,
நெல்லை மாவட்டம் இஞ்சிகுளி சேர்வலாறு பகுதியில் 145 காணி இனத்தைச் சேர்ந்த பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்குள்ள மக்கள், திருநெல்வேலி மாவட்ட கலெக்டரின் உதவியோடு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர்.
மலைகளில் கிடைக்கக் கூடிய பொருட்களை, மதிப்பு கூட்டு பொருட்களாக்கி விற்பனை செய்யும் வகையில் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாகியுள்ளது. தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின ஸ்டார்ட் அப் என்ற பெருமையை பெற்றுள்ள அந்த நிறுவனம் மூலம், காணிப் பழங்குடி பொருட்கள் விற்பனையகமும் தொடங்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story