சிபிஐ விசாரணைக்கான முன் அனுமதி ரத்து - தமிழ்நாடு அரசு அதிரடி
தமிழ்நாட்டில் சிபிஐ விசாரணை மேற்கொள்ள முன் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
சென்னை,
தமிழ்நாட்டில் சிபிஐ அமைப்பு விசாரணை மேற்கொள்ள முன் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழ்நாடு அரசின் அனுமதியின்று மாநிலத்திற்குள் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தலாம்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் சிபிஐ விசாரணை நடத்த வழங்கப்பட்டிருந்த முன் அனுமதியை தமிழ்நாடு அரசு இன்று ரத்து செய்துள்ளது. சில வகை வழக்குகளுக்கென வழங்கப்பட்டிருந்த பொதுவான முன் அனுமதியை தமிழ்நாடு அரசு திரும்பப்பெற்றுள்ளது.
இதன் மூலம் இனி தமிழ்நாட்டில் சிபிஐ (மத்திய புலனாய்வுத்துறை) விசாரணை மேற்கொள்ள தமிழ்நாடு அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும். முன் அனுமதி பெற்றபின்னே தமிழ்நாட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த முடியும்.
முன்னதாக மேற்குவங்காளம், கேரளா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களும் சிபிஐ விசாரணைக்கு வழங்கப்பட்டிருந்த முன் அனுமதியை ஏற்கனவே திரும்பபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.