தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை கூட்டம்
பேட்டையில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை கூட்டம் நடந்தது.
திருநெல்வேலி
பேட்டை:
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை பேட்டை பகுதி வியாபாரிகளின் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் பேட்டையில் நடந்தது. பேட்டை பகுதி தலைவர் முத்துக்குமார் வரவேற்று பேசினார். மாவட்ட கவுரவ தலைவர் பிச்சைராஜ் தலைமை தாங்கினார். இணை ஒருங்கிணைப்பாளர் மகாராஜேந்திரன், மாவட்ட துணைத்தலைவர் காமாட்சி நாதன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிச்சையா ஆசாரி, மாவட்ட செயலாளர் ஜெபக்குமார், மாவட்ட பொருளாளர் முகமதுராஜா, மாநகர தலைவர் வாகைமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில துணைத்தலைவர் எஸ்.கே.எம்.சிவக்குமார், மாவட்ட தலைவர் ராஜசேகர் ஆகியோர் பேசினார்கள். மாநில தலைவர் முத்துக்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஒன்றிய நிர்வாகி தருவை காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேட்டை பகுதி செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story