சாம்பியன்களை உருவாக்கும் பூமி தமிழ்நாடு - பிரதமர் மோடி பேச்சு


சாம்பியன்களை உருவாக்கும் பூமி தமிழ்நாடு - பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 19 Jan 2024 7:08 PM IST (Updated: 19 Jan 2024 7:45 PM IST)
t-max-icont-min-icon

போட்டிகளில் பங்கேற்க வந்துள்ள அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் வாழ்த்துக்கள்.

சென்னை,

மூன்று நாள் பயணமாக இன்று தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தற்பொழுது சென்னையில் நடைபெறும் 'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டிகளின் துவக்க நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-

வணக்கம் சென்னை. போட்டிகளில் பங்கேற்க வந்துள்ள அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் வாழ்த்துக்கள்.

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கு வந்துள்ள அனைவரையும் வரவேற்கிறேன். தமிழ்நாட்டு மக்களின் வரவேற்பும், விருந்தோம்பலும் சொந்த ஊருக்கு வந்ததுபோல் இருக்கிறது. சென்னை கடற்கரையின் அழகு உங்களைக்கொள்ளை கொண்டுவிடும் என்பதில் ஐயமில்லை. தமிழக கலாசாரம் உங்கள் வீட்டில் உள்ளதை போன்ற உணர்வை ஏற்படுத்தும். விளையாட்டில் தமிழகத்திற்கென்று ஒரு இடம் உள்ளது, இது சாம்பியன்களை உருவாக்கும் பூமி.

ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக்கில் இந்தியா பெரும் சாதனை படைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா விளையாட்டுத்துறைக்கு புதிய உத்வேகம் கிடைத்துள்ளது.

வீரமங்கை வேலு நாச்சியார் மகளிர் சக்தியின் அடையாளம். தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை காண ஆர்வமாக உள்ளேன். சிறப்பு வாய்ந்த சிலம்பத்தை கேலோ விளையாட்டில் கொண்டு வந்ததற்கு நன்றி.விளையாட்டு போட்டிகளில் இந்தியாவை தலைச்சிறந்த நாடாக காண விரும்புகிறோம். விளையாட்டு என்பது பெரிய பொருளாதாரமாகும். இதில் இளைஞர்களுக்கு பல வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்தியாவில் விளையாட்டுத்துறையின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பீடப்பட்டுள்ளது.

விளையாட்டுடன் தொடர்புடைய பல்வேறு வல்லுநர்களுக்கும் நாம் களம் அமைத்து தந்து வருகிறோம். புதிய கல்விக்கொள்கையில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நம்மால் தகர்க்க முடியாத எந்த சாதனையும் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் தொடங்கியதாக அறிவித்து உரையை நிறைவு செய்தார் பிரதமர் மோடி.


Next Story