தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பொதுக்குழு கூட்டம்
செங்கோட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
செங்கோட்டை:
செங்கோட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் மாநில செயலாளர் செய்யது அலி தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் அப்துல் சலாம், செயலாளர் அப்துல்பாசித், துணைத்தலைவர் செய்யது மசூது, துணைச்செயலாளர்கள் செய்யது அலி, ஹாஜாமைதீன், பீர் மைதீன், புளியங்குடி பிலால், அன்வர் சாதிக், மருத்துவ அணி செயலாளர் அப்துல் பாசித், தொண்டரணி செயலாளர் புகாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொருளாளர் காஞ்சி இப்ராஹிம், மாநில செயலாளர்கள் இம்ரான், பைசல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் நிர்வாகிகள் ஏராளமோனோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை செங்கோட்டை கிளை நிர்வாகிகள் சாகுல் ஹமீது, அலியார், இஸ்மாயில் கரீம் மற்றும் கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
கூட்டத்தில், தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய மக்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் தொடர்ந்து பின்தங்கிய நிலையில் இருப்பதை கருத்தில் கொண்டு தற்போது நடப்பில் இருக்கும் 3.5 இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த கேட்டுக் கொள்வது, கொல்லம்- திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் செங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு அருகே போக்குவரத்துக்கு இடையூறாக குறுகலாக இருக்கும் பழமையான நுழைவுவாயிலை உடனடியாக அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.