தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது - விருதுநகர் மாவட்டம் முதலிடம் - முழு விவரம்


தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது - விருதுநகர் மாவட்டம் முதலிடம் -  முழு விவரம்
x
தினத்தந்தி 8 May 2023 4:37 AM GMT (Updated: 8 May 2023 11:38 AM GMT)

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.


Live Updates

  • சென்னையில் பட்டய கிளப்பிய தேர்ச்சி சதவீதம்!
    8 May 2023 5:27 AM GMT

    சென்னையில் பட்டய கிளப்பிய தேர்ச்சி சதவீதம்!

    ➤சென்னையில் 91.40% மாணவர்களும், 96.64% மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    ➤21,139 மாணவர்களும் 23,178 மாணவிகளும் தேர்வெழுதிய நிலையில் 94.14% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

  • பிளஸ் 2  பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே தமிழ் மொழியில் சதமடித்து அசத்திய 2 மாணவிகள்!
    8 May 2023 5:25 AM GMT

    பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே தமிழ் மொழியில் சதமடித்து அசத்திய 2 மாணவிகள்!

    ➤பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே 2 பேர் மட்டும் தமிழ் மொழியில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.  

    ➤ பிளஸ் 2 பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாணவி நந்தினி, அரக்கோணம் மாணவி லக்‌ஷயா ஸ்ரீ தமிழ்ப்பாடத்தில் சதமடித்து சாதனை படைத்துள்ளனர். தமிழ்மொழி பாடத்தில் 100/100 மதிப்பெண் எடுத்த மாணவிகளுக்கு தமிழகம் முழுவதிலிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

  • 8 May 2023 5:19 AM GMT

    எந்தெந்த பாடப்பிரிவில் 100க்கு 100 மதிப்பெண்...!

    ✿ இயற்பியல் 812, வேதியியல் -39,09, உயிரியல் -1494, தாவரவியல் -340, விலங்கியல் -154 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    ✿ அதிகபட்சமாக கணக்குப்பதிவியலில் 6,573 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    ✿ கணினி அறிவியல் 4,618, வணிகவியல் 5,678, பொருளியல் - 1706 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    ✿ அறிவியல் பாடப்பிரிவுகளில் 96.32% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வணிகவியல் பாடப்பிரிவுகளில் 91.63% பேர் தேர்ச்சி பெற்றுள்ளன.

    ✿ கலைப்பிரிவுகளில் 81.89 % , தொழிற்பாடப்பிரிவுகளில் 82.11% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.



     

  • மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி
    8 May 2023 5:06 AM GMT

    மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி

    மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி

    ➤ தேர்ச்சி பெற்றவர்கள் : 7,55,451 (94.03%)

    ✿ மாணவியர் : 96.38%

    ✿ மாணவர்கள் : 91.45%

    ✿ சிறைவாசிகள் : 79 பேர்

    ✿ மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி

    ✿ தமிழகத்தில் 326 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 100% பேர் தேர்ச்சி.

    ✿ மாற்றுத்திறனாளி மாணவர்கள் 89.20% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    ✿ தமிழில் 2 பேர் மட்டுமே 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    பாடம் சதவிகிதம்

    இயற்பியல் 97.76

    வேதியியல் 98.31

    உயிரியல் 98.47

    கணிதம் 98.88

    விலங்கியல் 97.76

    வணிகவியல் 96.41

  • 8 May 2023 5:03 AM GMT

    விருதுநகர் மாவட்டம் முதலிடம்

    பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாவட்டங்கள் 

    1) விருதுநகர் 97.85

    2) திருப்பூர் 97.79

    3) பெரம்பலூர் 97.59

    * விருதுநகர் மாவட்டம் 97.85 சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடம்

    * அரசு பள்ளிகளில் 96.45% பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம்

    * குறைந்தபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் 87.30 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

  • 8 May 2023 4:58 AM GMT

    விருதுநகர், திருப்பூர், பெரம்பலூர் மாவட்டங்கள் அதிக தேர்ச்சி

    பிளஸ் 2 தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார் அதன் விவரம் வருமாறு:-

    தேர்ச்சி பெற்றவர்கள் : 7,55,451 (94.03%)

    மாணவியர் : 96.38%

    மாணவர்கள் : 91.45%

    சிறைவாசிகள் : 79 பேர்

    மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி

    விருதுநகர், திருப்பூர், பெரம்பலூர் மாவட்டங்கள் அதிக தேர்ச்சி 

  • தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது
    8 May 2023 4:57 AM GMT

    தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது

    சென்னை,

    தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் 3,324 தேர்வு மையங்களில் கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத 8 லட்சத்து 36,593 பள்ளி மாணவர்கள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத்திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர் மற்றும் 90 சிறைக் கைதிகள் என ஒட்டுமொத்தமாக 8.65 லட்சம் பேர் வரை பதிவு செய்திருந்தனர். அவர்களில் 8.17 லட்சம் மாணவர்கள் தேர்வில் கலந்துகொண்டனர். சுமார் 48,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் பங்கேற்வில்லை.

    தேர்வு முடிந்ததும், மாணவ-மாணவிகள் எழுதிய விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் மாதம் 10-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 79 மையங்களில் நடந்தது. விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்று, மதிப்பெண்கள் பதிவேற்றப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டது. இதையடுத்து மே 5-ந்தேதி தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், நீட் தேர்வை கருத்தில் கொண்டு, தேர்வு முடிவு மே 8-ந்தேதி (இன்று) வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் வெளியிட்டார். 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், 10.00 மணிக்கு மேல் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் சென்று மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம். இதுதவிர பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் பதிவுசெய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பி வைக்கப்படுகிறது.


Next Story