தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்
தஞ்சாவூர்
தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் பாபு தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கலைச்செல்வன், தமிழரசன், சுயம்பு கஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். அண்ணாதுரை வரவேற்றார். இதில் தலைமை நிலைய செயலாளர் கனல் உ.கண்ணன், நிர்வாகிகள் பன்னீர்செல்வம், ஜெயக்குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சாதியினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கி சமூக நீதியை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். முடிவில் அஜெய் பிரகாஷ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story