பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் சேர முதலில் ஒப்புக்கொண்டு தற்போது தமிழக அரசு மறுக்கிறது: கவர்னர் குற்றச்சாட்டு
இளைஞர்களை கருத்தில் கொண்டு புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டிருக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
சென்னை,
கவர்னர் மாளிகையில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
பி.எம். ஸ்ரீ திட்டம் மூலம் கற்றலில் புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்படும். கற்றல், கற்பித்தல் திறன் மேம்படும். தமிழக அரசு முதலில் இத்திட்டத்தை ஏற்பதாக அறிவித்தது. ஆனால் தற்போது ஏற்க மறுக்கிறது; ஏற்கும் மாநிலங்களுக்கு நிதி வழங்கப்படுகிறது.
புதிய கல்விக்கொள்கையை ஏற்க வேண்டும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. அந்த கொள்கையை மத்திய அரசு வகுக்கவில்லை. பல்வேறு நிபுணர்கள் கொண்ட குழுதான் உருவாக்கியது. வருங்கால சமுதாயத்தை, இளைஞர்களை கருத்தில் கொண்டு புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டிருக்கிறது.
பல்வேறு மாநிலங்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்று விட்டன. சில மாநிலங்கள் மெல்ல மெல்ல ஏற்று வருகின்றன. எதிர்க்கும் மாநிலங்களும் புதிய கல்விக்கொள்கையை எந்த அளவில் எடுத்துக்கொள்ளலாம் என்றே சிந்திக்கின்றன. வேறு பெயர்களில் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்தி வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.