தமிழக அரசின் இல்லம் தேடி மருத்துவம்; இந்தியாவில் எங்கும் இல்லாத திட்டம் - அமைச்சர் சி.வி.கணேசன் பெருமிதம்


தமிழக அரசின் இல்லம் தேடி மருத்துவம்; இந்தியாவில் எங்கும் இல்லாத திட்டம் - அமைச்சர் சி.வி.கணேசன் பெருமிதம்
x

மருத்துவத்தைப் பொறுத்தவரை இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதன்மை மாநிலமாக இருப்பதாக அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள இ.எஸ்.ஐ. மருந்தகத்தில் அமைச்சர் சி.வி.கணேசன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கு வந்த நோயாளிகளிடம் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.கணேசன், மருத்துவத்தைப் பொறுத்தவரை இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதன்மை மாநிலமாக இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், "இந்தியாவில் எங்கும் இல்லாத 'இல்லம் தேடி மருத்துவம்' திட்டத்தின் மூலம் செவிலியர்கள் நோயாளிகளின் வீட்டிற்கே சென்று அவர்களுக்கு தேவையான மருந்துகளை நோய் குணமாகும் வரை வழங்கும் வழங்கி வருகிறார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த இத்திட்டத்தின் மூலம் பல லட்சம் பேர் பலனடைந்துள்ளனர். மருத்துவத்தைப் பொறுத்தவரை இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதன்மையாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.



Next Story