"தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது" - அமைச்சர் பொன்முடி


தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது - அமைச்சர் பொன்முடி
x

தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை அரும்பாக்கத்தில் தனியார் கல்லூரி நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-


தமிழ்நாட்டில் அதிகளவில் உயர்கல்வி நிறுவனங்கள் இருப்பதற்கு காரணம் திராவிட மாடல் ஆட்சி தான். திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கு புதுமைப் பெண் திட்டம், 7.5% இட ஒதுக்கீடு, பேருந்துகளில் மகளிருக்கு இலவசம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.


தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது. மத்திய கல்வி அமைச்சரிடம் எழுத்துப்பூர்வமான எதிர்ப்பை தமிழ்நாடு அரசு பதிவு செய்துள்ளது. விரைவில் மாநில கல்விக்கொள்கை வெளியிடப்படும். தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தான் அமலில் இருக்கும்.

3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது; அப்படி பொதுத் தேர்வு கொண்டுவந்தால் இடைநிற்றல் அதிகரிக்கும்; 10, 12-ம் வகுப்பில் பொதுத் தேர்வு இருந்தால் போதுமானது. முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்கும்.

இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்.


Next Story