தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டம்
குத்தாலம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டம் சேத்திரபாலபுரம் ஊராட்சியில் நடந்தது.
குத்தாலம்:
குத்தாலம் ஒன்றியம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் 28-வது பேரவை கூட்டம் சேத்திரபாலபுரம் ஊராட்சியில் நடந்தது. கூட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகக்குழு அப்துல் ஹாதி, ஒன்றிய துணை செயலாளர் ஏங்கல்ஸ், மாவட்ட குழு செல்வகுமார், சசிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய சங்க மாவட்ட செயலாளர் வீரராஜ் வரவேற்றார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது வரலாறு காணாத பெரும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிருக்கு காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி குத்தாலம் ஒன்றிய செயலாளர் அறிவழகன், மாவட்ட துணை செயலாளர் ராமன், மாவட்ட பொருளாளர் கணபதி, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ஜான் டேவிட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் விவசாய சங்க ஒன்றிய நிர்வாகக்குழு செல்வேந்திரன் நன்றி கூறினார்.