"மக்களுக்கு துரோகம் விளைவிக்கும் என்.எல்.சி நிறுவனம் தமிழகத்திற்கு தேவை இல்லை" - அன்புமணி ராமதாஸ் பேட்டி


மக்களுக்கு துரோகம் விளைவிக்கும் என்.எல்.சி நிறுவனம் தமிழகத்திற்கு தேவை இல்லை - அன்புமணி ராமதாஸ் பேட்டி
x

மக்களுக்கு துரோகம் விளைவிக்கும் என்.எல்.சி நிறுவனம் தமிழகத்திற்கு தேவை இல்லை என்றுஅன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தையும், கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் என்.எல்.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி நெய்வேலி ஆர்ச் கேட் அருகில் பா.ம.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-

கடலூர் மாவட்டத்தில் 64 ஆண்டுகாலமாக இந்த மண்ணையும், மக்களையும் ஏமாற்றி பழுப்பு நிலக்கரியை எடுத்து நிலத்தடி நீரை உறிஞ்சி பாலைவனமாக என்.எல்.சி நிறுவனம் மாற்றிக்கொண்டிருக்கிறது.

ஆசியாவில் தன்னூற்று இருந்த பகுதி நெய்வேலி தான். 8 அடி இருந்த தண்ணீர் தற்போது ஆயிரம் அடிக்கு சென்றுவிட்டது. இதற்கு முழு காரணம் என்.எல்.சி நிறுவனம் தான். நிலம் கொடுத்த மக்களுக்கு என்.எல்.சி நிறுவனத்தில் வேலை இல்லை. அவர்களுக்கு வாழ்வாதாரம் இல்லை.

எந்த நிறுவனத்தையும் நான் வேண்டாமென்று கூறியதில்லை. ஆனால் மக்களுக்கு துரோகம் விளைவிக்கும் என்.எல்.சி நிறுவனம் தமிழகத்திற்கு தேவை இல்லை. என்.எல்.சி நிறுவனத்தை மூட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை.

ராணுவத்தை கூட்டி வந்தாலும் என்.எல்.சி நிறுவனத்துக்கு பூட்டு போடுவோம். இனி யாரும் ஏமாற மாட்டோம். நிலம் எடுக்க வந்தால் முடியாது எனக்கூறுங்கள். உங்கள் அனுமதி இல்லாமல் ஒருபிடி மண்ணை கூட எடுக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story