அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் புதுமைப்பெண், காலை உணவுத் திட்டம்: பட்ஜெட்டில் அறிவிப்பு
திருக்குறளை மேற்கோள் காட்டி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர், நிதிநிலை அறிக்கையில் உள்ள அம்சங்கள் குறித்து உரையாற்றினார்.
Live Updates
- 19 Feb 2024 11:07 AM IST
300 கோடி ரூபாய் செலவில் பள்ளிகளில் 15,000 ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும்
இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
பள்ளிக்கட்டமைப்புகளை மேம்படுத்த 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
- 19 Feb 2024 11:01 AM IST
* உயர்கல்வி பெற விரும்பும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும்
* 2 ஆயிரம் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட 356 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
* 5 ஆயிரம் ஏரிகள், குளங்கள் புனரமைப்பு செய்ய 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
- 19 Feb 2024 10:56 AM IST
சிங்காரச் சென்னை-2
சிங்காரச் சென்னை-2 திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
சென்னையில் சாலைகளை விரிவுபடுத்த 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
சென்னையின் கோவளம், பெசன்ட் நகர், எண்ணூர் ஆகிய கடற்கரைகள் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அழகுபடுத்தப்படும்
- 19 Feb 2024 10:48 AM IST
அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும், புதுமைப்பெண் திட்டம் இந்த ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இந்த திட்டத்திற்கு 370 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழ்நாட்டில் கிராமப் புறங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகளும் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த திட்டத்திற்காக 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
- 19 Feb 2024 10:45 AM IST
வைகை, காவிரி, தாமிரபரணி, நொய்யல் ஆறுகளை ஒட்டிய பகுதிகளை மேம்படுத்த புதிய திட்டம் அமைக்கப்படும்
சென்னை பூவிருந்தவல்லி அருகே திரைப்பட நகரம் அமைக்க 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
நாமக்கல்லில் 358 கோடி ரூபாயில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் 13 ஆயிரத்து 720 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
மகளிர் இலவச பேருந்து பயண ‘விடியல் பயணம்’ திட்டத்திற்கு இந்த ஆண்டில் 3 ஆயிரத்து 50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
- 19 Feb 2024 10:41 AM IST
மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு ஆகிய நகரங்களில் நதிகளை மீட்டெடுக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
அடையாறு நதி சீரமைப்புக்கு 1,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
சென்னை மாநகரில் பொதுக்கழிப்பிடங்களை மேம்படுத்த 430 கோடி ரூபாயில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்
- 19 Feb 2024 10:40 AM IST
கலைஞரின் கனவு இல்லம்:
2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஊரகப்பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும். இந்த திட்டத்திற்கு கலைஞரின் கனவு இல்லம் என பெயர் சூட்டப்படும்.
- 19 Feb 2024 10:38 AM IST
கீழடி, வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.