தமிழ் இலக்கிய கூட்டம்
சங்கரன்கோவில் மனோ கல்லூரியில் தமிழ் இலக்கிய கூட்டம் நடந்தது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் - சுரண்டை சாலையில் உள்ள மனோ கல்லூரியில் தமிழ் இலக்கிய கூட்டம் நடந்தது. கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் தலைமை தாங்கினார். உடற்கல்வி இயக்குனர் கணேசன் முன்னிலை வகித்தார். பேராசிரியை மேனகா வரவேற்று பேசினார். பேராசிரியர் கணபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். புளியங்குடி மனோ கல்லூரி தமிழ் பேராசிரியர் ராமராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். தமிழ்த்துறை தலைவர் அருள் மனோகரி சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்தார்.
விழாவில் பேராசிரியர்கள் வினோத், வின்சென்ட், ராஜேஷ், பெஞ்சமின் நிர்மல், ஷகிலா பானு, பாலசரஸ்வதி, மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, பாடல் போட்டி, ஓவிய போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் மாணவி தமயந்தி குணா நன்றி கூறினார்.