தமிழ் மொழி மிகவும் பழமையானது, இந்தியை திணிக்க முடியாது: கவர்னர் ஆர்.என்.ரவி
தமிழ் மொழி மிகவும் பழமையானது என்பதால் அதன் மீது இந்தியை திணிக்க முடியாது என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை,
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்கள் மத்தியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று கலந்துரையாடினார். கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கவர்னர் ஆர்.என்.ரவி கூறும் போது, தமிழ் மொழி மிகவும் பழமையானது என்பதால் அதன் மீது இந்தியை திணிக்க முடியாது. இந்தி மட்டும் அல்ல.. வேறு எந்த மொழியையும் அதன் மீது திணிக்க முடியாது.
இந்தியை விட மிகப்பழமையானது தமிழ் மொழி. சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழியாகும். திருக்குறள் மனித சமூகத்திற்கு தேவையான அனைத்து கருத்துக்களையும் வழங்கும் நூல். திருக்குறளை ஆழமாக அனைவரும் பயில வேண்டும்" என்றார்.
Related Tags :
Next Story