தமிழ் கனவு நிகழ்ச்சி
ஆழ்வார்குறிச்சி கல்லூரியில் தமிழ் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது.
கடையம்:
ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியில் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திருச்சி சிவா எம்.பி. கலந்து கொண்டு யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மாணவ-மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதலுக்கான கையேடு, தமிழ்ப் பெருமிதம் என்ற கையேடு வழங்கப்பட்டது. மேலும் மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் உயர் கல்வி வழிகாட்டி குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
இதில் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தர், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பிரான்சிஸ், தென்காசி தாசில்தார் சுப்பையன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன், அரசு அலுவலர்கள், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.