தமிழ் கனவு பரப்புரை நிகழ்ச்சி


தமிழ் கனவு பரப்புரை நிகழ்ச்சி
x
தினத்தந்தி 25 Feb 2023 12:15 AM IST (Updated: 25 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டை அரசு கல்லூரியில் தமிழ் கனவு பரப்புரை நிகழ்ச்சி நடந்தது.

தென்காசி

சுரண்டை:

சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில், தமிழ்நாடு அரசு சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான தமிழ்க்கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் சின்னத்தாய் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக மாநில திட்டக்குழு உறுப்பினர் நர்த்தகி நடராஜ், சந்தச் சபையில் செந்தமிழ் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து ஊடகவியலாளர் செந்தில்வேல், திரைப்படமும் அரசியலும் என்ற தலைப்பில் பேசினார். நிகழ்ச்சியில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 8 கல்லூரிகளில் இருந்து 800 மாணவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து தமிழ்க்கனவு காணொலி ஒளிபரப்பப்பட்டது. நிகழ்சியில் சிறப்பாக பங்கேற்ற 10 மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். முன்னதாக பல்வேறு அரசுத்துறையினர் அமைத்திருந்த கண்காட்சியை அனைவரும் கண்டு களித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, உதவி கலெக்டர் கங்காதேவி, சிரஸ்தார் அரிகரன், வீரகேரளம்புதூர் தாசில்தார் தெய்வசுந்தரி, மண்டல துணை தாசில்தார் முருகன், சுரண்டை வருவாய் ஆய்வாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story