குற்றாலம் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி


குற்றாலம் அருவியில் குளிக்க  சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
x
தினத்தந்தி 7 Nov 2022 12:15 AM IST (Updated: 7 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளப்பெருக்கு குறைந்ததை தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

தென்காசி

வெள்ளப்பெருக்கு குறைந்ததை தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

வெள்ளப்பெருக்கு

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் தென்காசி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கடந்த 4-ந் தேதி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக ‌பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இதேபோன்று மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நேற்று முன்தினம் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

குளிக்க அனுமதி

இந்த நிலையில் நேற்று காலையில் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதையடுத்து அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் அனுமதி அளித்தனர். அங்கு ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் ஐந்தருவி, புலி அருவி, சிற்றருவி ஆகியவற்றிலும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

இதற்கிடையே, பழைய குற்றாலம் அருவியில் நேற்று தொடர்ந்து 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தற்போது சீசன் இல்லாததால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.


Next Story