பிரபஞ்சத்தின் கருந்துளை ஆராய்ச்சி கருத்தரங்கு


பிரபஞ்சத்தின் கருந்துளை ஆராய்ச்சி கருத்தரங்கு
x
தினத்தந்தி 5 April 2023 12:30 AM IST (Updated: 5 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் பிரபஞ்சத்தின் கருந்துளை ஆராய்ச்சி கருத்தரங்கு நடந்தது.

திண்டுக்கல்

கொடைக்கானல் வான் இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில், பிரபஞ்சத்தில் உள்ள கருந்துளை குறித்த ஆராய்ச்சி கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதற்கு விஞ்ஞானி ஏ.ஆர்.ராவ் தலைமை தாங்கினார். இந்த கருத்தரங்கில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் கருந்துளை குறித்து விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து கருந்துளைகளால் ஏற்படும் விளைவுகள், அதன் கதிர் வீச்சுகளால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து சேமிக்கப்பட்ட ஆய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் நட்சத்திரம் பிறக்கும் போது அதன் நிலை என்ன, இறக்கும் போது கருந்துளைகளாக மாறுகின்றதா, எந்த நட்சத்திரங்களில் இது போன்ற மாற்றங்கள் ஏற்படுகிறது என்றும் விஞ்ஞானிகள் கலந்துரையாடினர்.

இந்த கருத்தரங்கில் இந்திய விண் இயற்பியல் முதன்மை விஞ்ஞானி எபிநேசர், கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி மைய விஞ்ஞானி சாந்த பிரததாஸ், விஞ்ஞானி சி.எஸ்.ஸ்டாலின், டாடா ஆராய்ச்சி நிறுவனம், ரஞ்சிவ் (ஐயூகா) மிஸ்ரா, ஐ.ஐ.டி. கவுகாத்தி சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் 21 ஆராய்ச்சி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story