சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகம் அருகே உள்ள சித்தலூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் ஆனி மாத அமாவாசையையொட்டி கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. . இதையொட்டி பெரியநாயகி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பெரியநாயகி அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோவிலை சுற்றி வலம் கொண்டு வரப்பட்டு, ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதன்பிறகு பூசாரிகள் தாலாட்டு பாட ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.