தேனியில் கோடைகால நீச்சல் பயிற்சி


தேனியில் கோடைகால நீச்சல் பயிற்சி
x
தினத்தந்தி 26 April 2023 2:15 AM IST (Updated: 26 April 2023 2:16 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் கோடைகால நீச்சல் பயிற்சி தொடங்கியுள்ளது.

தேனி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில், கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. முதல் நாளில் பெற்றோர்கள் ஆர்வமுடன் தங்களின் குழந்தைகளை அழைத்து வந்தனர். அவர்களின் பெயர் பதிவு செய்த பிறகு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமை மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் தொடங்கி வைத்தார். மாவட்ட நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் தலைமையில் நீச்சல் பயிற்சி பெற்ற பாதுகாவலர்கள் முன்னிலையில் மாணவ-மாணவிகளுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சி முகாம் 12 நாட்கள் வீதம் 3 கட்டமாக நடக்கிறது. முதற்கட்ட பயிற்சி முகாம் அடுத்த மாதம் (மே) 7-ந்தேதி வரையும், 2-வது கட்ட பயிற்சி முகாம் மே 9-ந்தேதி முதல் 21-ந்தேதி வரையும், 3-வது கட்ட பயிற்சி மே 23-ந்தேதி முதல் ஜூன் 4-ந்தேதி வரையும் நடக்கிறது. திங்கட்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒரு மணி நேரம் வீதம் தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரை 3 பிரிவுகளாகவும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 3 பிரிவுகளாகவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story