புஞ்சைசங்கேந்தியில் தங்கப்பல்லக்கில் சுவாமி வீதி உலா


புஞ்சைசங்கேந்தியில் தங்கப்பல்லக்கில் சுவாமி வீதி உலா
x
தினத்தந்தி 3 Jun 2023 1:54 AM IST (Updated: 3 Jun 2023 12:23 PM IST)
t-max-icont-min-icon

புஞ்சைசங்கேந்தியில் தங்கப்பல்லக்கில் சுவாமி வீதி உலா நடந்தது.

திருச்சி

புஞ்சைசங்கேந்தி கிராமத்தில் உள்ள பூரண, புஷ்கலா சமேத ஹரிஹர புத்திர சுவாமி, தைலாயி லெட்சுமாயி சமேத துரைசாமி மற்றும் பரிவார தெய்வங்கள் எழுந்தருளியுள்ள கோவில் புனரமைக்கப்பட்டு, நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இரவில் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தங்கப்பல்லக்கு, முத்து பல்லக்கில் எழுந்தருள, கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா நடைபெற்றது. அப்போது கிராம மக்கள் அவரவர் வீடுகளுக்கு முன்பு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் செண்பகம் செந்தில்குமார், துணைத் தலைவர் சுதா செந்தில்குமார், சங்கேந்தி ஆண்டவர் அறக்கட்டளை நிர்வாகி ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள், சுமார் 25 கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள், சங்கேந்தி ஆண்டவர் அறக்கட்டளை நிர்வாகிகள், இளைஞர்கள், கிராம மற்றும் உள்ளூர், வெளியூர் கோவில் குடிபாட்டுமக்கள் செய்திருந்தனர்.


Next Story