தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் திருவீதி உலா
ராமேசுவரம் கோவிலில் தைப்பூச தெப்பத்திருவிழாவையொட்டி தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் திருவீதி உலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் கோவிலில் தைப்பூச தெப்பத்திருவிழாவையொட்டி தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் திருவீதி உலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தங்கரிஷப வாகனத்தில் திருவீதி உலா
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச தெப்பத்திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டின் தைப்பூசத் திருவிழா நேற்று நடைபெற்றது.
அதற்காக கோவிலில் இருந்து சுவாமி- அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் காலை 10 மணிக்கு புறப்பாடாகி நகரின் முக்கிய சாலை வழியாக நேற்று மதியம் 1 மணிக்கு லெட்சுமணேசுவரர் தீர்த்தம் கோவிலுக்கு வந்தடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தெப்பத்திருவிழா
இதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி, அம்பாள் வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன. அதன்பிறகு சுவாமி-அம்பாள் வைக்கப்பட்ட தெப்பத்தை சுற்றிவரும் நிகழ்வானது லெட்சுமண தீர்த்த தெப்பக்குளத்தில் நடைபெற்றது. சாமி அம்பாள் உடன் வைக்கப்பட்ட தெப்பம் ஆனது 11 முறை தெப்பக்குளத்தை சுற்றி வந்தடைந்தது. பின்னர் மீண்டும் அங்கிருந்து சுவாமி,அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி இரவு 10.30 மணிக்கு கோவிலுக்கு வந்தடைந்தனர்.கோவிலில் அர்த்தசாமபூஜை, பள்ளியறை பூஜை நடைபெற்று கோவில் நடை சாத்தப்பட்டது.
லட்சுமணதீர்த்த குளத்தில் நடந்த தெப்பத்திருவிழாவில் கோவிலின் துணை ஆணையர் மாரியப்பன் உதவி ஆணையர் பாஸ்கரன், நேர்முக உதவியாளர் கமலநாதன் மற்றும் ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி-அம்பாளை தரிசனம் செய்தனர். அதுபோல் தெப்ப திருவிழாவிற்காக சாமி-அம்பாள் நேற்று லெட்சுமணன் தெப்பக்குளத்திற்கு வந்ததை தொடர்ந்து காலை 10 மணியிலிருந்து இரவு வரையிலும் கோவிலில் நடை சாத்தப்பட்டத்துடன் பக்தர்கள் தீர்த்தமாடவும் தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கத