போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த கூட்டுறவு உதவியாளர் பணி இடை நீக்கம்
போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த கூட்டுறவு சங்க அலுவலக உதவியாளர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.
நாமக்கல்
மோகனூர்
போலி சான்றிதழ்
மோகனூர் அடுத்த ஆரியூரை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 57). இவர் அதே பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் இவர் போலியான கல்வி சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேர்ந்ததாக புகார் எழுந்தது.
அதன்பேரில் ஜெயராமின் கல்வி சான்றிதழ்களை சரி பார்க்கும் பணியில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். விசாரணையில் ஜெயராமன் கொடுத்த கல்வி சான்றிதழ் போலியானது என தெரியவந்தது.
பணி இடை நீக்கம்
இதையடுத்து ஜெயராமனை பணி இடை நீக்கம் செய்து மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் கர்ணன் நடவடிக்கை மேற்கொண்டார். கூட்டுறவு சங்க அலுவலகத்தில் போலி சான்றிதழ் கொடுத்து 25 ஆண்டுகள் பணியாற்றியவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story