போதையில் இருந்த போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்
போதையில் இருந்த போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஆரணி
போதையில் இருந்த போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஆரணி டவுன் போலீஸ் ஏட்டு சத்தியமூர்த்தி என்பவர் ஆரணி நகரில் கடந்த 14-ந்் தேதி இரவு ரோந்து பணி மேற்கொண்டபோது மது போதையில் இருந்ததாக திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயனுக்கு புகார் வந்தது.
அது குறித்து விசாரிக்க ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல் ராஜன் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்பேரில் ஏட்டு சத்தியமூர்த்தியை தொடர்ந்து கண்காணித்ததில் அவர் இரவு ரோந்து பணி மேற்கொள்ளும் போது மது போதையில் இருந்து வருவது தெரியவந்தது.
இதனையடுத்து அவருக்கு ஆரணி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையில் சத்தியமூர்த்தி மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டு டாக்டர்கள் மூலம் ஆதாரம் பெற்று அனுப்பி வைக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் ஏட்டு சத்தியமூர்த்தியை திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.