துணைதாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் தற்காலிக பணி நீக்கம்
துணைதாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
சிவகங்கை
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்த தே. புதுக ்கோட்டையில் தனியாருக்கு சொந்தமான சுமார் 200 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தில் சுமார் 69 ஏக்கரை தனி நபர் 5 பேர்களுக்கு வருவாய் துறை அதிகாரிகள் பட்டா போட்டுக் கொடுத்தார்களாம். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி உத்தரவின்பேரில் சிவகங்கை கோட்டாட்சியர் முத்துக்கழுவன் விசாரணை நடத்தினார். அப்போது 5 பேருக்கு 69 ஏக்கர் இடத்தை தவறாக பட்டா கொடுத்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மானாமதுரை மண்டல துணை வட்டாட்சியர் சேகர் மற்றும் தே. புதுக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் முத்துக்குமார் ஆகிய 2 பேரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story