நிலங்களை அளவிடும் பணி


நிலங்களை அளவிடும் பணி
x
தினத்தந்தி 20 March 2023 12:30 AM IST (Updated: 20 March 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் ஒன்றிய அலுவலகத்துக்கு சொந்தமான நிலங்களை அளவிடும் பணி நடந்தது. விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் ஒன்றிய அலுவலகத்துக்கு சொந்தமான நிலங்களை அளவிடும் பணி நடந்தது. விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிலங்கள் அளவிடும் பணி

கொள்ளிடம் ஊராட்சியில் ஒன்றியத்துக்கு சொந்தமாக சுமார் 40 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து வருவதாகவும், இந்த இடங்களை மீட்டு அங்கு அரசு அலுவலகங்கள் கட்டவும் முடிவு செய்யப்பட்டது.இதை தொடர்ந்து கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை முதலில் அளவீடு செய்து பின்னர் கையகப்படுத்தும் பணியில் அதிகாரிகள் நேற்று முன்தினம் ஈடுபட்டனர்.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்

இந்த பணியில் கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், துணைத் தலைவர் பானுசேகர், ஒன்றிய ஆணையர் அருள்மொழி, நில அளவையர்கள் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.இதுகுறித்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறுகையில் அளவீடு செய்யப்பட்ட நிலங்களில் விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். பின்னர் அங்கு அரசு அலுவலகங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story