புதிய சாலைகள் அமைக்க அளவீடு செய்யும் பணி


புதிய சாலைகள் அமைக்க அளவீடு செய்யும் பணி
x
தினத்தந்தி 24 March 2023 12:15 AM IST (Updated: 24 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கூவனூர் கிராமத்தில் புதிய சாலைகள் அமைக்க அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே கூவனூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சரும், கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான எ.வ.வேலு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தான் பிறந்த கூவனூர் கிராமத்தை தத்தெடுப்பதோடு, கூவனூர்- சாங்கியம் கிராமங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பாலம் மற்றும் சாலை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தருவதாக அக்கிராம மக்களிடம் உறுதியளித்திருந்தார்.

அதன் அடிப்படையில் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் உத்தரவின்பேரில் முதல் கட்டமாக நேற்று கூவனூர் கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் புதிய சாலைகள் அமைப்பதற்கான அளவீடு செய்யும் பணி மற்றும் திட்ட மதிப்பீடு செய்யும் பணி அதிகாரிகள் குழுவினரால் நடைபெற்றது. இந்த பணியின்போது திருக்கோவிலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஏகாம்பரம், திருக்கோவிலூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செட்டிதாங்கல் அய்யனார், கூவனூர் ஊராட்சி மன்ற தலைவர் அய்யனார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கண்ணன், ஊராட்சி செயலாளர் ஞானவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story