கலெக்டர் துரை ரவிச்சந்திரன் ஆய்வு
கடையம் பகுதிகளில் கலெக்டர் துரை ரவிச்சந்திரன் ஆய்வு ஆய்வு செய்து, மாணவர்களிடம் கலந்துரையாடினார்
கடையம்:
தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் கடையம், பெரும்பத்து பகுதிகளில் நடைபெற்று வரும் ஊட்டச்சத்து மைய கட்டிட பணி, சேர்வைக்காரன்பட்டி நடைபெற்று வரும் ஊருணி பணி, கீழக்கடையத்தில் நடைபெற்று வரும் நூலக கட்டிட பணி, முதலியார்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிட பணிகளை ஆய்வு செய்து, மாணவர்களிடம் கலந்துரையாடினார். தொடர்ந்து ஆழ்வார்குறிச்சியில் புதிய பேருந்து நிலையத்திற்கு ஆய்வு செய்து தொடர்ந்து அங்குள்ள திடக்கழிவு மேலாண்மை பற்றி கேட்டறிந்து பார்வையிட்டார். பின்னர் அவ்வை ஆசிரமம், சாந்தி காது கேளாதோர் பள்ளி சென்று அங்குள்ள குழந்தைகளிடம் கலந்துரையாடினார். தொடர்ந்து கடனாநதி அணை பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் கடையம் யூனியன் ஆணையாளர் ராஜசேகர், கடையம் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலை முருகன், ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலர் பூதபாண்டியன், ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி தலைவர் சரஸ்வதி, துணைத் தலைவர் சங்கர், கடையம் வட்டார மருத்துவ அலுவலர் பழனி குமார், பொதுப்பணித்துறை உதவி செயற் பொறியாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் கணபதி, யூனியன் உதவி பொறியாளர் ராதாகிருஷ்ணன், அவ்வை ஆசிரம துணைத் தாளாளர் பாலமுருகன், தலைமை ஆசிரியர் சரவணன், உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் வின்சென்ட், ஊராட்சி மன்ற தலைவர்கள் மலர்மதி சங்கரபாண்டியன், ரூஹான் ஜன்னத் சதாம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
* கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் பிரேமலதா தலைமை தாங்கினார். கடையநல்லூர் அரசு தலைமை மருத்துவர் அனிதா பாலின் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன், தனுஷ் குமார் எம்.பி., கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர். கர்ப்பிணி பெண்களுக்கு தாய்-சேய் நல பெட்டகம் வழங்கப்பட்டது. மாவட்ட சித்தர் மருத்துவ அலுவலர் உஷா, தி.மு.க. நகர செயலாளர் அப்பாஸ், நகரமன்ற உறுப்பினர் திவான் மைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். டாக்டர் கார்த்திக் அறிவுடைநம்பி நன்றி கூறினார்.