மேலும் ஒரு வாலிபர் கோர்ட்டில் சரண்
சமையல் தொழிலாளி கொலையில் மேலும் ஒரு வாலிபர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் யாதவர் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முருகன் (வயது 43). சமையல் தொழிலாளியான இவர் கடந்த 22-ந் தேதிபடுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து அவரது மனைவி செல்வி (40) அளித்த புகாரின் பேரில் களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன், சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கொலை வழக்கு தொடர்பாக சிங்கிகுளத்தை சேர்ந்த ஐகோர்ட் மகாராஜா (வயது 34), ராமச்சந்திரன் (43) கீழதேவநல்லூரை சேர்ந்த இசக்கிப்பாண்டி (32) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். சொக்கலிங்கம் என்பவர் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் சரண் அடைந்தார். மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக இசக்கிமுத்து (28) என்பவர் அம்பை கோர்ட்டில் சரண் அடைந்தார். தலைமறைவாக உள்ள வானமாமலை உள்பட 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.