சுரண்டை நகராட்சி புதிய ஆணையாளர் பொறுப்பேற்பு
சுரண்டை நகராட்சி புதிய ஆணையாளர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தென்காசி
சுரண்டை:
பொள்ளாச்சி நகராட்சி உதவி ஆணையாளராக பணியாற்றிய வெங்கடேசன் சுரண்டை நகராட்சி ஆணையாளராக பதவி உயர்வு பெற்றார். அவர் சுரண்டை நகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு நகராட்சி தலைவர் ப.வள்ளிமுருகன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது தற்போது நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டிட அனுமதி மற்றும் மக்களின் அடிப்படை தேவைகளை காலதாமதம் இன்றி நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அப்போது சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.டி.ஜெயபால், கவுன்சிலர்கள் அமுதா சந்திரன், பாலசுப்பிரமணியன், ராஜ்குமார், ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story