சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை


சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை
x
தினத்தந்தி 27 May 2023 12:15 AM IST (Updated: 27 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கூட்டம் வருகிற 29-ந்தேதி தொடங்குகிறது.

தென்காசி

சுரண்டை:

சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் இரா.சின்னத்தாய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு அனைத்து இளங்கலை, அறிவியல் பாடப்பிரிவிற்கான சிறப்பு இட ஒதுக்கீடு கலந்தாய்வு கூட்டம், முன்னாள் ராணுவத்தினர் வாரிசு, மாற்றுத்திறனாளிகள், தேசிய மாணவர் படை, விளையாட்டு பிரிவு மற்றும் அந்தமான் நிக்கோபார் மாணவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீட்டு கலந்தாய்வு கூட்டம் வருகிற 29-ந் தேதி நடக்கிறது. மற்றவர்களுக்கு இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், நுண்ணுயிரியல், கணிதம் ஆகிய அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு அடுத்த மாதம் (ஜூன்) 5-ந்தேதியும், வணிக நிர்வாகவியல் (பி.பி.ஏ.), வணிகவியல் (பி.காம்.) பாடப் பிரிவுகளுக்கு 7-ந்தேதியும், பொருளியல், பாடப்பிரிவுக்கு 8-ந்தேதியும், தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு 9-ந்தேதியும் நடக்கிறது.

விண்ணப்பித்த மாணவ-மாணவிகள் மேற்குறிப்பிட்ட நாட்களில் தங்களது 10-ம் வகுப்பு சான்றிதழ், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ், விண்ணப்பித்த படிவம் அசல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் கார்டு ஆகியவை அசல் மற்றும் 4 நகல்களுடன் காலை சரியாக 9 மணிக்குள் கல்லூரி வளாகத்திற்கு வந்து வருகை பதிவேட்டில் கையொப்பமிட வேண்டும். மேலும் மாணவ-மாணவிகள் தங்கள் தரவரிசை பட்டியல் விவரங்களை www.kgac.ac.in என்ற கல்லூரியின் இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story