சுரண்டை அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை
சுரண்டை அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.
சுரண்டை:
சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் 2022- 2023 கல்வியாண்டிற்கான இளங்கலை மற்றும் இளம் அறிவியல் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக் கூட்டம் 5-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. அனைத்து பாடங்களுக்கும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள், தேசிய மாணவர் படை, தேசிய மாநில அளவிலான விளையாட்டு வீரர்கள் ஆகிய இடங்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வு நாளை நடக்கிறது. 11-ந் தேதி பி.எஸ்.சி கணிதம், வேதியல், இயற்பியல், கணினி அறிவியல், நுண்ணுயிரியல் ஆகிய அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 12-ந் தேதி வணிகவியல், வணிக நிர்வாகவியல், பொருளியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் நடக்கிறது. 13-ந் தேதி தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களுக்கு கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு கூட்டம் வருகிற 18-ந் தேதி அனைத்து அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 22-ந் தேதி தமிழ், ஆங்கிலம் உட்பட அனைத்து இளங்கலை பாடப் பிரிவுகளுக்கும் நடக்கிறது. எனவே விண்ணப்பித்த மாணவ-மாணவிகள் அந்தந்த நாட்களில் காலை 10 மணிக்கு அனைத்து அசல் சான்றிதழ்களுடன் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த தகவலை, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) அ.பீர்கான் தெரிவித்துள்ளார்.