நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் முன்னேற்பாடு பணிகள்போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு


நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் முன்னேற்பாடு பணிகள்போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு
x

குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல்

குடமுழுக்கு விழா

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் நரசிம்ம சாமி கோவிலின் உப கோவிலான ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த ஆஞ்சநேயர் கோவிலில், ஒரே கல்லாலான 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இங்கு கடந்த 2009-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. இந்தநிலையில் வருகிற நவம்பர் மாதம் 1-ந் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. அதையொட்டி 30-ந் தேதி காலை சிறப்பு யாகங்கள் தொடங்கப்பட்டு, 31-ந் தேதி மாலை வரை நடைபெறுகிறது. அதற்காக கடந்த சில நாட்களாக யாகசாலை அமைக்கும் பணிகளும், கோவில் வளாகத்தில் பந்தல் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

இந்தநிலையில் நேற்று நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நடந்து வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பக்தர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள பந்தல்கள் மற்றும் கோவில் வளாகத்தில் மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகள் குறித்து கோவில் உதவி ஆணையர் இளையராஜாவிடம் கேட்டறிந்தார்.

மேலும் ஆஞ்சநேயர் கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெறும் நாளன்று காவல்துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு, போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் பாண்டியன் மற்றும் போலீசாருக்கு ஆலோசனைகளை வழங்கினார்.


Next Story