நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க போலீசாருக்கு சூப்பிரண்டு அறிவுறுத்தல்
நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க போலீசாருக்கு சூப்பிரண்டு அறிவுறுத்தினார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பா் மாதத்திற்கான குற்ற கலந்தாய்வு கூட்டம் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் குறித்து ஆய்வு செய்தும், புலன் விசாரணை முடியாமல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்ற கலந்தாய்வு செய்தும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க போலீசாருக்கு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் காவல்துறையின் வாகனங்களும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மதியழகன் (தலைமையிடம்), வேலுமணி (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு), துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பழனிசாமி (பெரம்பலூர் உட்கோட்டம்), சீராளன் (மங்களமேடு உட்கோட்டம்), தங்கவேல் (மாவட்ட குற்றப்பிரிவு), சோமசுந்தரம் (ஆயுதப்படை) மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.