வார விடுமுறையையொட்டி ஞாயிற்றுக்கிழமை திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்


வார விடுமுறையையொட்டி ஞாயிற்றுக்கிழமை திருச்செந்தூர் கோவிலில்  குவிந்த பக்தர்கள்
x
தினத்தந்தி 10 July 2023 12:15 AM IST (Updated: 10 July 2023 3:14 PM IST)
t-max-icont-min-icon

வார விடுமுறையையொட்டி ஞாயிற்றுக்கிழமை திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் குவிந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி

சுப்பிரமணிய சுவாமி கோவில்

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

வார விடுமுறை தினமான நேற்று (ஞாயிற்றுக்கிழமை)அதிகாலை முதலே கோவிலில் குவிந்த பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

அலைமோதிய பக்தர்கள்

கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மாலையில் சாயரட்சை தீபாராதனையை தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடந்தது.

பல்வேறு ஊர்களில் இருந்தும் கார், வேன், பஸ்களில் ஏராளமானவர்கள் குடும்பத்தினருடன் வந்து முருகபெருமானை வழிபட்டனர். இதனால் கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.யது.


Next Story