கல்லாவி அருகேவிஷம் குடித்து வாலிபர் தற்கொலை


கல்லாவி அருகேவிஷம் குடித்து வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 21 March 2023 12:30 AM IST (Updated: 21 March 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை தாலுகா கல்லாவி அருகே உள்ள பனமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 23). இவர் டிப்ளமோ படித்து விட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதுகுறித்து பெற்றோர் கேட்டனர். இதனால் மனமுடைந்த கிருஷ்ணமூர்த்தி கடந்த 14-ந் தேதி விஷம் தின்று தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி இறந்தார். இதுகுறித்து கல்லாவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story