மத்தூர் அருகேதொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலைமனைவி உள்பட 2 பேர் கைது


மத்தூர் அருகேதொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலைமனைவி உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 March 2023 12:30 AM IST (Updated: 8 March 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

மத்தூர்:

மத்தூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாகன மனைவி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தொழிலாளி

மத்தூர் அருகே உள்ள பள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 32). சவுண்ட் சர்வீஸ் தொழிலாளி. இவருக்கும் துர்கா தேவி (26) என்ற பெண்ணுக்கும் கடந்த 6 ஆண்டுகளுககு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளாள்.

இந்த நிலையில் துர்கா தேவி, சிவம்பட்டி பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் அருண்குமார் (36) என்பவரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த சுரேஷ் மனைவியை கண்டித்தார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது.

கைது

இதனால் மனவேதனை அடைந்த சுரேஷ் நேற்று அதிகாலை வீட்டில் யாரும் இல்லாதபோது கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சுரேசின் தந்தை முருகன் கொடுத்த புகாரின்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற மத்தூர் போலீசார் சுரேசின் உடலை கைப்பற்றி மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் தற்கொலைக்கு தூண்டியதாக மனைவி துர்கா தேவி, அருண்குமார் ஆகியோரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story