பாண்டமங்கலத்தில் கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
பாண்டமங்கலத்தில் கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
பரமத்திவேலூர்:
பாண்டமங்கலத்தில் கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கூலித்தொழிலாளி
பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் கார்த்திக் (வயது 21). கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கார்த்திக் வீட்டில் தனியாக இருந்தபோது விட்டத்தில் தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக மகனை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
விசாரணை
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கார்த்திக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
====