அரூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்தாரா? போலீசார் விசாரணை

அரூர் அருகே  தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை  ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்தாரா? போலீசார்  விசாரணை
x

அரூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்சம் ரூபாயை இழந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி

அரூர்:

அரூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்சம் ரூபாயை இழந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள முத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 37). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். பிரபுவுக்கு ஆன்லைன் ரம்மி விளையாடுவதில் ஆர்வம் இருந்ததாகவும் கடந்த சில நாட்களில் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு ரூ.45 ஆயிரம் வரை இழந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சோகமாக காணப்பட்ட பிரபு நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மூலமாக பிரபு ஏற்கனவே பல லட்சம் ரூபாயை இழந்ததாக கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

இந்த தற்கொலை குறித்து தகவல் அறிந்த அரூர் போலீசார் விசாரணையை தொடங்கினார்கள். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் பிரபு தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story