போச்சம்பள்ளி அருகே தையல் தொழிலாளி தற்கொலை


போச்சம்பள்ளி அருகே  தையல் தொழிலாளி தற்கொலை
x

போச்சம்பள்ளி அருகே தையல் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்:

போச்சம்பள்ளி அருகே உள்ள நொருக்குபாறையை சேர்ந்தவர் கணேசன் (வயது 50). தையல் தொழிலாளி. இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் கணேசன் மனைவியை கல்லால் தாக்கினார். இதில் காயம் அடைந்த அவரது மனைவி சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதன் பிறகு மன வருத்தத்தில் இருந்த கணேசன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story