மனைவி பிரிந்து சென்றதால் வேதனை: மதுபாட்டிலால் குத்தி கூலித்தொழிலாளி தற்கொலை


மனைவி பிரிந்து சென்றதால் வேதனை:  மதுபாட்டிலால் குத்தி கூலித்தொழிலாளி தற்கொலை
x

பரமத்தியில் மனைவி பிரிந்து சென்ற வேதைனயில் மதுபாட்டிலை உடைத்து கழுத்தில் குத்தி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்தியில் மனைவி பிரிந்து சென்ற வேதைனயில் மதுபாட்டிலை உடைத்து கழுத்தில் குத்தி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

கூலித்தொழிலாளி

பரமத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜன் (வயது 25). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி வனிதா. இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வனிதா கணவரிடம் கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

விசாரணை

இதனால் மனமுடைந்து காணப்பட்ட ராஜன் கடந்த 1-ந் தேதி அதிகளவில் மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் குடிபோதையில் மதுபாட்டிலை உடைத்து அதை கொண்டு தனது கழுத்தில் குத்தி கொண்டாராம்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமணையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story