முகநூல் மூலம் பழக்கம்:காதல் திருமணம் செய்த பெண் தற்கொலைஉதவி கலெக்டர் விசாரணை


முகநூல் மூலம் பழக்கம்:காதல் திருமணம் செய்த பெண் தற்கொலைஉதவி கலெக்டர் விசாரணை
x

சேலத்தில் முகநூல் மூலம் பழகி வாலிபரை காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்

சேலம்

சேலத்தில் முகநூல் மூலம் பழகி வாலிபரை காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முகநூல் காதல்

மதுரையை சேர்ந்தவர் கவுதம் (வயது 21). இவருக்கு சேலம் களரம்பட்டி பகுதியை சேர்ந்த ஹரிபிரியா (வயது 18) என்ற பெண்ணுடன் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. அவர்கள் இருவரும் கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி மதுரையில் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து ஹரிபிரியா, கவுதமுடன் களரம்பட்டி பகுதியில் வசித்து வந்தார்.

கவுதம் கட்டிட தொழிலுக்கு சென்று வந்தார். ஹரிபிரியாவுக்கு திருமணம் நடப்பதற்கு முன்பு தாசநாயக்கன்பட்டியை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவர் ஹரிபிரியாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அந்த வாலிபர், ஹரிபிரியா வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரிடம் தகராறு செய்துள்ளார். தனக்கு திருமணம் ஆகி விட்டது என்றும், என்னிடம் இனி பேச வேண்டாம் என்றும் அந்த வாலிபரிடம் ஹரிபிரியா கூறியுள்ளார்.

தற்கொலை

ஆனாலும் ஹரிபிரியாவிடம் அவர் தொடர்ந்து தகராறு செய்துவிட்டு அங்கிருந்து சென்றார். இந்த சம்பவத்தால் மனமுடைந்து காணப்பட்ட ஹரிபிரியா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் கிடைத்ததும் கிச்சிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

ஹரிபிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக கவுதமிடம் போலீசார் விசாரணை நடத்தினர். திருமணத்தின் போது ஹரிபிரியா திருமண வயதை எட்டவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் கவுதமிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

உதவி கலெக்டர் விசாரணை

ஹரிபிரியாவிடம் தகராறு செய்து விட்டு தப்பி சென்ற வாலிபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இறந்த ஹரிபிரியாவுக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆவதால் உதவி கலெக்டர் அம்பாயிரநாதன் விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story